செவ்வாய், 22 நவம்பர், 2011

மக்களின் மவுன புரட்சி வெல்லட்டும்

எவ்வளவு விலை உயர்த்தினாலும், பேருந்தில் மக்கள் கூட்டம் குறையாது என்பதே இந்த கட்டண உயர்வின் சாராம்சம். குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாய் என்றாலும், 10 ரூபாய் ஆனாலும் மக்கள் பயணம் செய்து தான் ஆகவேண்டும். இது
மக்களே ஏற்படுத்திக்கொண்ட dependency . மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், இந்த நாட்டில், ஏன் இந்த உலகில், எல்லா பொருள்களின் விளையும் ஏறிக்கொண்டேதான் போகிறது, எறிய விலைவாசி ஒரு போதும் இறங்குவதில்லை. இது உலக உண்மை. இதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

இது போன்ற விலையேற்றங்களை பொது மக்கள் எதிர்த்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ போராடுவதில்லை. என்னால் இதை அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும், இதற்கான போராட்டத்தில் நாம் ஈடுபட வேண்டியதில்லை என்று தனக்கு தானே ஒரு சமாதனம் செய்து கொள்கிறான். யாரவது போராடி விலையை குறைத்தால் அதனால் ஏற்படும் வசதியை அனுபவிக்க தயங்குவதில்லை.

இந்த விலை உயர்வை மக்களால் நீர்த்துப்போக செய்ய முடியும். போக்குவரத்து கழகங்களும், மின் துறையும், ஆவின் நிறுவனமும் இந்த விலை உயர்வால் எந்த நன்மையும் அடைய போவதில்லை என்பதை மக்கள் அரசுக்கு உணர்த்த முடியும், மக்கள் முயன்றால்.

நிர்வாக சீர்கேடு கொண்ட நிறுவனங்களுக்கு எவ்வளவுதான் சலுகை அளித்தாலும் அவை மீண்டு வர முடியாது என்பதை அரசுக்கு புரியவைக்க வேண்டும். ஓட்டை பையில் எவ்வளவு காசு போட்டாலும் அவை தங்காது.

இதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும்?
பேருந்து பயணத்தை முடிந்த அளவு புறக்கணிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் எக்காரணம் கொண்டும் பேருந்தை பயன்படுத்தாதீர்கள். பால் பயன்பாட்டை சிறிது காலத்திற்கு குறைத்து கொள்ளுங்கள். அல்லது முற்றாக நிறுத்தி விடுங்கள். டிவி சீரியல் பார்ப்பதை நிறுத்துங்கள். மின்சார பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள்.

இந்த மூன்று நிறுவனங்களும் மக்களை நம்பி தான் இயங்குகின்றன. மக்கள் இதன் பயன்பாட்டை குறைக்கும் போது தானாக நம்ம வழிக்கு வந்து விடும்.

இரண்டு நாட்கள் ஒட்டு மொத்த மக்களும் முற்றாக இந்த பயன்பாடுகளை நிறுத்துவதால், அதனால் ஏற்படக்கூடிய இழப்பை சரிகட்ட இந்த நிறுவனகளுக்கு பல வாரங்கள் பிடிக்கும்.

சாட்டை நம் கையில். சுத்துவதும் சுத்தாததும் நம் பொறுப்பு. அதை விடுத்தது அரசிடம் கெஞ்சுவதால் ஒன்றும் நடக்கபோவதில்லை.

மக்களின் மவுன புரட்சி வெல்லட்டும்.